வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆயக்குடி பகுதியில் கூலித் தொழிலாளியான சந்தோஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் குமார் வேலைக்காக தென்காசிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தோஷ்குமார் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று அங்குள்ள மரத்தின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் சந்தோஷ்குமார் தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயமடைந்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சந்தோஷ் குமாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.