அரசு மதுபாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்று வந்த 4 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் பத்மா நகர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ராணிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராணிப்பேட்டை மாந்தாங்கல் பத்மா நகர் பகுதியில் வசிக்கும் கோகிலா, ராணி ஆகிய இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அரசு மது பாட்டில்களை வாங்கி வந்து சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கரம்பக்குடி காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.அதைப்போல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாணாபாடி தமிழன்னை பகுதியில் வசிக்கும் கோமதி, அம்மு ஆகிய இருவரும் அரசு மதுபாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சிப்காட் காவல்துறையினர் அவர்களை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.