பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் மஹா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிம்பு நடித்துள்ளார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். மேலும் இது ஹன்சிகாவின் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹா திரைப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 2-ஆம் தேதி வெளியானது. க்ரைம் த்ரில்லராக உருவான இந்த படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்த நிலையில், அதை அடுத்து வெளியான டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. இதனால் டீசர் வெளியாகி நான்கு நாட்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.