கனமழையின் காரணமாக குளம் போல் காட்சி அளித்த சாலையில் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மதுரை சுற்றுவட்டார பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகள் அனைத்திலும் நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் சாலையில் செல்ல முடியாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
இதனையடுத்து திடீரென பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதானல் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ளது.ஆனாலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.