நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பஹத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
Icon staar @alluarjun's #Pushpa Shoot resumes today 🔥#PushpaRaj #ThaggedheLe 🤙
PUSHPA SHOOT RESUMES 💥@iamRashmika #FahadhFaasil @aryasukku @ThisIsDSP @resulp @adityamusic @MythriOfficialపుష్ప പുഷ്പ புஷ்பா ಪುಷ್ಪ पुष्पा pic.twitter.com/MrR2FTPiaj
— Pushpa (@PushpaMovie) July 6, 2021
தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. மேலும் நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான புஷ்பா படத்தின் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோன பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் இன்று புஷ்பா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது .