தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதை அடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறார். கொரோனா இக்கட்டான காலகட்டத்தில் கூட மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விளையாட்டு வீரர்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்.
அந்தவகையில் தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 5 தடகள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 தடகள வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.