Categories
உலக செய்திகள்

28 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்…. துண்டிக்கப்பட்ட தொடர்பு…. தேடும் பணியில் ரஷ்ய அதிகாரிகள்….!!

ரஷ்யாவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் தீடிரென மாயமானதால் பரப்பரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டில் இருந்து 28 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் விமானம் கம்சட்கா தீபகற்பத்தின் மேலே பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு  துண்டிக்கப்பட்டு மாயமானது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உட்பட 22 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மாயமான விமானத்தை கம்சட்கா தீபகற்பத்தில் இருக்கும் மேற்கு கடற்கரையில் உள்ள பழனா நகரின் அருகில் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒரு விமானமும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் பயணிகள் விமானம் காணாமல் போனதற்கு மோசமான வானிலைதான்  காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |