Categories
தேசிய செய்திகள்

“ஆபத்திலிருந்த தாய், தம்பி” துரிதமாக செயல்பட்டு…. காப்பாற்றிய 2 வயது குழந்தை…!!

உத்தரபிரதேச மாநிலம் பைரல்லி மாவட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே ஸ்டேஷனில் தன்னுடைய இரண்டு வயது குழந்தை மற்றும் 6 மாத குழந்தையுடன் பிளாட்பாரத்திற்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண் மற்றும் அவருடைய 6 மாத குழந்தையும் மயங்கி சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார். இதை அறிந்த அந்த இரண்டு வயது குழந்தை என்ன செய்வது என்று அறியாமல் தன்னுடைய தாயும், தம்பியும் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து சுற்றித் திரிந்துள்ளது. இதையடுத்து அந்த ரயில்வே ஸ்டேஷனை தாண்டி ஒரு பெண் போலீஸ் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார்.

இதையடுத்து அந்த குழந்தை பெண் காவலரிடம் தன் தாய் மயங்கி கிடக்கும் திசையை நோக்கி கையை நீட்டி காட்டியுள்ளது. அப்போது குழந்தையின் பின்னே சென்ற போது அங்கு 30 வயது மதிக்கதக்க பெண்ணும் ஆறு மாத கைக்குழந்தையும் மயங்கி கிடப்பதை பெண் காவலர் பார்த்துள்ளார. இதையடுத்து அந்த பெண் அவர்களை போலீஸ் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

தற்போது அவர்களுக்கு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு இரண்டு வயது குழந்தை தன்னுடைய தாயும் தம்பியும் ஆபத்தில் இருப்பதை கண்டு தன்னால் முடியாது என்பதால் யாருடைய உதவியாவது கிடைக்குமா? என்பதை எண்ணி சைகை மூலம் பெண் போலீசுக்கு தெரிவித்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Categories

Tech |