சுற்றுலா பயணிகள் சாத்தனூர் அணையை சுற்றி பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி முதல் சுற்றுலா தலங்களை சுற்றிபார்க்க அரசு தடை விதித்திருந்தது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான சாத்தனூர் அணை மூடப்பட்டிருந்தது . இந்த சாத்தனூர் அணை மூடப்பட்டதால் அரசுக்கு ரூபாய் 15 லட்சம் வரை வருவாய் இழப்பீடு ஏற்பட்டது . மேலும் சாத்தனூர் அணையை காண வரும் சுற்றுலா பயணிகளை நம்பியிருந்த வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து 75 நாட்களுக்கு பிறகு மீண்டும் சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உதவிப் பொறியாளர் சிவகுமார் கூறும்போது, அணையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும் , சமூக இடைவெளியை பின்பற்றியும், சானிடைசரை பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிப்பது ,படகு சவாரி செய்வது போன்றவற்றிக்கு அனுமதி இல்லை என்று கூறினார். இந்நிலையில் சாத்தனூர் அணையை சுற்றிப் பார்க்க அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.