Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! சிந்தனைத் திறன் அதிகரிக்கும்….! தேவைகள் பூர்த்தியாகும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! ரகசியங்களை பகிர வேண்டாம்

இன்று புத்திர பாக்கியம் ஏற்படும் நாளாக இருக்கின்றது. இல்லத்தில் மழலைச் செல்வம் கிடைக்கக்கூடிய அம்சம் இருக்கின்றது. கணவன் மனைவிக்கிடையே நெருக்கமான உறவு இருக்கும். பெரிய பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தெய்வீக சிந்தனை உருவாகும். செல்வம் சேர்ந்துவிடும். செல்வாக்கு உயர்ந்துவிடும். மனதில் ஏதாவது குறை இருக்கும். அந்த குறையும் நிவர்த்தி ஆகிவிடும். தேவையற்ற பய உணர்வை தவிர்க்க வேண்டும். புதிய நபர்களிடம் பேசும் போது கவனம் தேவை. ரகசியங்களை பகிர வேண்டாம். தடைப்பட்ட பணம் கண்டிப்பாக வந்து சேரும். அதிகப்படியான கோபத்தை தவிர்க்க வேண்டும். அதனால் கவனமுடன் பேசவேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் இருந்தால் உங்கள் மனதில் ஒருவித நிம்மதி வரும்.

தைரியமாக எதையும் செய்ய முடியும். வாகனம் மூலம் செலவுகள் உண்டாகலாம். செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். யாரைப் பற்றியும் தனிநபர் விமர்சனங்கள் வேண்டாம். இன்று காதல் வசப்படும். காதல் கைகூடி விடும். காதல் எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாது. மாணவர்கள் கல்வியில் சிரமப்பட்ட நிலை இப்பொழுது மாறிவிடும். தடங்கள் இருந்த நிலையும் மாறிவிடும். கல்விக்காக எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் நல்லது நடக்கும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 5                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு

Categories

Tech |