கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் கொரோனா காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களது பெற்றோர்கள் கணவன் மனைவி குழந்தைகள் தாய் தந்தை என்ற பல உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் உதவித்தொகை வழங்கி வருகின்றன.
அந்த குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள மிகப்பிரபலமான பள்ளிகளில் ஒன்றான ஹைதராபாத் பப்ளிக் பள்ளி, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளி கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், அடுத்த ஆண்டுக்கு அனைவருக்கும் ரூ10,000 பள்ளி கட்டணத்திலிருந்து தள்ளுபடி அளிக்க படுவதாகவும் தெரிவித்துள்ளது.