வாடிக்கையாளர்களின் வங்கி விபரங்களை பெறுவதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரில் அழைப்புகள் வருவதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. அவ்வாறு தொடர்புகொள்ளும் மர்மநபர்கள் வங்கி கணக்கு விவரங்களை திரட்டி பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. அதனால் போலி தகவல்களை நம்பி தனிப்பட்ட வங்கி விவரங்கள், KYC போன்றவற்றை பகிர வேண்டாம். சிம் ஆவணம் சரிபார்க்க படுவதாகவும், உதவி என்னை தொடர்புகொள்ள கூறும் போலி தகவல்களை உடனே புறக்கணிக்க வேண்டும் என கூறியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.
Categories