Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிறந்தநாள் காணும் கிரிக்கெட் வீரர் தோனிக்கு… வாழ்த்துக்களை சொல்லிடலாமா… “ஹேப்பி பர்த்டே தல தோனி”…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் நாயகனான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள்.

1981 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பம். தனது பொழுதுபோக்குகள் அனைத்தையும் சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். இளம் வயதிலிருந்து இவருக்கு கால்பந்து மற்றும் பேட்மிட்டன் மிகவும் பிடித்த விளையாட்டு. கால்பந்து அணியின் கோல் கீப்பராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய தோனி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்படவே, அவருக்கு பதிலாக அவரது நண்பர்கள் இவரை கீப்பிங் செய்யச் சொன்னார்கள்.

இதையடுத்து இவர் கால்பந்தை விட கிரிக்கெட்டை மிகவும் ஆர்வமாகவும் சிறப்பாகவும் விளையாடினார். அப்போது தொடங்கிய கிரிக்கெட் வாழ்க்கை இன்றுவரை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் கனவான உலக கோப்பையை டி 20 மற்றும் ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு பெற்று தந்த பெருமை இவரையே சாரும். திறமையான விளையாட்டு, சூழ்நிலைகளை சாதாரணமாக எதிர்கொள்வது, எதிலும் பயம் பதட்டம் இல்லாமல் மிகவும் கூலாக இருப்பது மக்களை அதிக அளவில் இவர் பக்கம் ஈர்த்தது.

எவ்வளவு சிக்கலான போட்டியாக இருந்தாலும் இறுதியில் தோனி அடிக்கும் சிக்ஸரில் இந்தியா மாபெரும் வெற்றி பெரும். தன் விளையாட்டால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற மிக முக்கியமான பிரபலம் என்றால் அது தோனி தான், அவரது வாழ்க்கை முயற்சி செய்யும் இளைஞர்களுக்கான எடுத்துக்காட்டு. அவரது பிறந்த நாளான இன்று அவருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

 

Categories

Tech |