இரண்டு சகோதரிகளை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 19 வயது இளைஞன் குற்றவாளி என்பது நிரூபணமாகியுள்ளது.
லண்டன் Wembley பூங்காவில் கடந்த ஆண்டு ஜூன் 6ஆம் தேதி பிறந்த நாளை கொண்டாட சென்ற Bibaa Henry(46) மற்றும் Nicole Smallman(27) என்ற இரண்டு சகோதிரிகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பூங்காவில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை பார்வையிட்டனர். அதில் Danyal Hussein என்ற இளைஞன் கத்தியுடன் பூங்காவுக்குள் நுழைந்த காட்சியை வைத்து அவனை கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்கு விசாரணை வந்ததை தொடர்ந்து அவர்தான் குற்றவாளி என்பது நிரூபனமானது. மேலும் Danyal Hussein அந்த சகோதிரிகளை எட்டு முறை கத்தியால் குத்தியுள்ளார் என்றும் அவர்கள் உயிர் பிழைக்க போராடிய நிலையில் இருந்த 28 முறை கத்தியால் குத்தியுள்ளான் என்பதும் தெரியவந்ததை அடுத்து அவரது மனநிலை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.