முனி 4 படத்தின் திரைக்கதை புத்தகத்தை ஏழுமலையான் கோவிலில் வைத்து நடிகர் ராகவா லாரன்ஸ் வழிபட்டார்.
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் முனி-3 வெற்றியை தொடர்ந்தது அதன் நான்காம் பாகத்தை இயக்க முயற்சித்து வருகிறார். அதன் படி திரைப்பட கதை தயாரான நிலையில், திரைகதை புத்தகத்தை ஏழுமலையான் கோவிலில் வைத்து தரிசிக்க இன்று திருப்பதிக்கு குடும்பத்துடன் வந்து இருந்தார்.
அப்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்தில் சுற்றுப்புற பகுதிகளை போன்று படப்பிடிப்பு தளம் அமைப்பதற்காக கோவில் வளாகத்தை பார்வையிட்டார். சுவாமி தரிசனத்திற்குப் பின் வெளியேறிய ராகவா லாரன்ஸை சுற்றிவளைத்த ரசிகர்கள் பலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அவரை பேட்டி எடுக்க முயன்றபோது சுவாமி தரிசனத்திற்கு வந்த இடத்தில் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறி மறுத்துவிட்டார்.