பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி. இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார். மேலும் இவர் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
Man of Simplicity 😍 #VijaySethupathi 🔥 #vjs pic.twitter.com/ifCuZkexA1
— Shivani Narayanan (@Shivani_offl) July 6, 2021
இந்நிலையில் ஷிவானி பிரபல நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்துள்ளார் . மேலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷிவானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ‘எளிமையான மனிதர்’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.