ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்படும் என்ற தகவல்கள் வெளியானதற்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகிக்கொள்ள இருப்பதால் கடந்த சில வாரங்களாக தலிபான் தீவிரவாதிகளின் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தியா ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான முறையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியத் தூதரகங்கள் மூடப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில் காபூலில் உள்ள இந்திய தூதரகம் இது தவறான செய்தி என்றும் இது போன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து காபூல், காந்தகார், மசார் ஆகிய நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றது.