Categories
உலக செய்திகள்

ஐயா ஜாலி வீட்டுக்கு வந்தோட்டம் …. சிங்கத்தை பிடித்து சென்ற அதிகாரிகள்…. பிரதமரின் உத்தரவால் மீண்டும் ஒப்படைப்பு ….!!!

கம்போடியாவில் அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த சிங்கம் பிரதமரின் உத்தரவால் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கம்போடியாவில் புனோம் பென்னில் வசித்து வரும் சீனாவை சேர்ந்த தம்பதியினர் அவர்களுடைய  வீட்டில் ஆண் சிங்கத்தை  வளர்த்து வந்துள்ளனர் . அவர் வளர்த்துவரும் சிங்கத்துடன் சேர்ந்து எடுத்த டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதனால் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி அவர் வளர்த்து வந்த சிங்கத்தை பிடித்து சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த அந்நாட்டுப் பிரதமர் ஹன் சென்  சிங்கத்தை மீண்டும் தம்பதியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் சிங்கத்தை கூண்டில் அடைத்து முறையாக உணவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் அந்த  தம்பதிக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து அதிகாரிகள் சிங்கத்தை மீண்டும் உரிமையாளரின் வீட்டுக்கே சென்று ஒப்படைத்தனர்.இதனால் அந்த சிங்கம் உற்சாகத்தில் வீட்டிற்குள் வலம் வந்தது.

Categories

Tech |