இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ள தெலுங்கு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் லிங்குசாமியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.
The Big News is Here! 🎇#RAPO19 Shoot Commences on July 12th, Stay tuned for more updates
Ustaad @ramsayz @dirlingusamy @IamKrithiShetty @ThisIsDSP @SS_Screens @sujithvasudev @NavinNooli @anbariv pic.twitter.com/5P27TZok7g
— Srinivasaa Silver Screen (@SS_Screens) July 7, 2021
இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாகவும், கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 12-ஆம் தேதி முதல் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.