Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய செஞ்சிருப்பா…? அதிர்ச்சியடைந்த பூசாரி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கோவில் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் இசக்கியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் பூசாரி இசக்கியப்பன் என்பவர் கோவிலில் அன்றாடம் பூஜை செய்து வந்துள்ளார். இதனையடுத்து காலை நேரத்தில் இசக்கியப்பன் பூஜை செய்ய வந்த போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் சாமி நகைகளை திருடிச் சென்றது இசக்கியப்பனுக்கு தெரியவந்தது. இது குறித்து இசக்கியப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |