பழுதடைந்து இருக்கும் தடுப்பணை ஷட்டரை சீரமைக்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குஜிலியம்பாறை பகுதியில் கடந்த வருடம் விராலிப்பட்டி குளத்தில் சுமார் 3 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. மேலும் தடுப்பணை கட்டுவதற்கு நடைபாதை கற்கள் பதித்தல், வர்ணம் பூசுதல் போன்ற சில பணிகள் நிறைவடையாமல் மீதமிருக்கிறது. இந்நிலையில் விராலிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இலுப்பப்பட்டி, காட்டுமநாயக்கன்பட்டி, சாணி பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகிறது.
தற்போது அப்பகுதியில் கனமழை பெய்ததால் குளத்தில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கட்டப்பட்டுள்ள புதிய தடுப்பணையின் ஷட்டர் பழுதடைந்தது. இதனால் குளத்தில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் ஷட்டர் வழியாக வீணாகி வெளியில் செல்கிறது. இதனால் விவசாயிகள் உடைந்துள்ள ஷட்டரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.