Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணுறாங்க…? நள்ளிரவில் நடந்த சம்பவம்… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம நபர்கள் அரிவாளால் காரின் கண்ணாடிகளை உடைத்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் அருண்குமார் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இரண்டு பேருக்கு சொந்தமான கார்களின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் அருண்குமார் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் காரின் கண்ணாடிகளை உடைத்து விட்டு செல்லும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம நபர்களின் விபரம் குறித்தும், எதற்காக கார் கண்ணாடிகளை உடைத்தார்கள் என்பது பற்றியும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |