Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் அதை வாங்கி தரேன்” வாலிபரின் தில்லுமுல்லு வேலை… சென்னையில் பரபரப்பு…!!

மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள பாலவாக்கம் பகுதியில் ஸ்ரீபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு வாகன விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு வண்டி மேடு பகுதியில் வசிக்கும் நவ்சாத் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் நவ்சாத்தின் மகன் ஷாருக் என்பவருக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி ஸ்ரீபதி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரிடமிருந்து 3 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார்.

ஆனால் எட்டு மாதங்கள் கடந்த பிறகும் ஸ்ரீபதி மருத்துவ சீட் வாங்கிக் கொடுக்காததால் கோபமடைந்த நவ்ஷாத் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பண மோசடி செய்த குற்றத்திற்காக ஸ்ரீபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |