Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னெல்லாம் சொல்லிருக்காங்க… தொடர்ந்து 4 முறை கருகலைப்பு… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

இளம் பெண்ணை ஏமாற்றியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் 29 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணிற்கு கடந்த 2019-ஆம் ஆண்டு குரோம்பேட்டை பகுதியில் வசிக்கும் 52 வயதான ரகு என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் ரகு தனது மனைவி புற்றுநோய் பாதிப்பால் இறந்து விட்டதாகவும், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பு நிறுவனத்தில் தான் மேலாளராக பணி புரிவதாகவும் அந்த இளம் பெண்ணிடம் கூறியுள்ளார். அதன் பிறகு அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரகு அவருடன் நெருங்கி பழகியுள்ளார்.

இதனால் தொடர்ந்து 4 முறை அந்த இளம்பெண் கர்ப்பமானதும் ரகு கட்டாயப்படுத்தி கருவை கலைக்க செய்துள்ளார். அதன் பின் அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் கூறியதற்கு ரகு தனது மைத்துனரான பிரபாகரன் என்பவருடன் இணைந்து இளம்பெண்ணை தாக்கியதோடு, அவரது இரு சக்கர வாகனம் மற்றும் தங்க நகையை பறித்து விட்டு அனுப்பியுள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரகுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |