Categories
உலக செய்திகள்

பச்சிளம் குழந்தையை என்ன செய்தார்கள்..? 2 வருடங்களாக ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த சடலம்..!!

அமெரிக்காவில் ஒரு வீட்டில் இரண்டரை வருடங்களாக 4 வயது குழந்தையின் சடலம் குளிர்சாதன பெட்டியில் மறைத்துவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா என்ற மாகாணத்தில் இருக்கும் Richmond என்ற நகரத்தில் இருக்கும் ஒரு வீட்டில் சடலத்தை மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வீட்டிற்கு சென்று, காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீசரை திறந்துள்ளனர்.

அதில் காவல்துறையினர் பார்த்த காட்சி அவர்களை அதிர செய்துள்ளது. அங்கு நான்கு வயது குழந்தையின் சடலம் இருந்துள்ளது. உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்டதில், Eliel Adon Weaver என்ற இச்சிறுவனின் உடல் ஃப்ரீசரில் இரண்டரை வருடங்களாக இருந்தது தெரியவந்திருக்கிறது.

சிறுவனின் பெற்றோரான Dina D. Weaver மற்றும் Kassceen Weaver இருவரையும் காவல்துறையினர்  கைது செய்தனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின், குழந்தையின் இறப்பு குறித்த காரணம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |