உலக அளவில் 16.97 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. கொரோனா பெரும் தொற்றால் உலக அளவில் 18.53 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே 16.97 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் இதுவரை 40.08 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 1.16 கோடிக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 77 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.