Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதனால்தான் இப்படி ஆயிட்டு…. திடீரென சரிந்த புளியமரம்…. போக்குவரத்துத்துறை ஊழியர்களின் பணி….!!

ஓட்டேரியில் சாலையின் நடுவில் வேரோடு சரிந்த புளியமரத்தை போக்குவரத்துத்துறை ஊழியர்கள் அகற்றி சீர் செய்தனர்.

வேலூர் மாவட்ட மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பூமி குளிர்ந்து மண் ஈரப்பதத்துடன் இருப்பதனால் ஓட்டேரி பேருந்து நிறுத்தம் அருகில் வேலூர்- ஆரணி சாலையோரம் நின்று கொண்டிருந்த புளியமரம் திடீரென வேரோடு சாய்ந்தது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் சாலையின் நடுவில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி போக்குவரத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த சாலை வழியாக வந்த வாகன ஓட்டிகளை வேறு வழியாக காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர். அதன்பின் போக்குவரத்துதுறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றிய பின் அந்தச் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

Categories

Tech |