Categories
தேசிய செய்திகள்

BREAKING: அமைச்சர்கள் திடீர் ராஜினாமா…. புதிய பரபரப்பு….!!!!!

கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது பாஜக. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தார். அப்போது தேர்வுசெய்யப்பட்ட அதே அமைச்சரவை தான் இப்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமைச்சர்கள் மாற்றப்படவில்லை. புதிதாக எந்த அமைச்சர்களும் நியமிக்கப்படவில்லை. மொத்தமாக 57 அமைச்சர்கள் இருந்தனர். அதில் இரு அமைச்சர்கள் இயற்கை எய்தினர். இரு அமைச்சர்கள் பதவி விலகினர்.

ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மூன்று, நான்கு துறைகளைச் சேர்த்து கவனித்துக் கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. தற்போது அமைச்சரவையில் 53 பேர் தான் இருக்கிறார்கள். அமைச்சரவையில் மொத்த பலம் 81. ஆகவே 28 பதவிகள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பவும் மாற்றம் கொண்டுவரவும் பிரதமரும் கட்சித் தலைமையும் ஆலோசித்து வந்தது.

அதேபோல ஒருசில அமைச்சர்களின் செயல்பாடுகளும் கட்சித் தலைமைக்கும் பிரதமருக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இச்சூழலில் நேற்று சமூகநீதித் துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் தொழிலாளர்நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வாரும் ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது

Categories

Tech |