தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்க பணத்துடன் ஆட்டோவில் தவறவிடப்பட்ட பயணியின் சூட்கேசை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கடந்த எட்டாம் தேதி ஆட்டோ ஓட்டுநரான தர்மராஜ் என்பவர் தனது ஆட்டோவில் தவறவிடப்பட்ட ஒரு சூட்கேஸை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் இருந்துள்ளன.
இதையடுத்து விசாரணையில் அந்த சூட்கேஸ் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரித்வி என்ற பெண்ணிற்கு சொந்தமானது என்றும் உறவினர்களை பார்ப்பதற்காக சென்னை வந்த பெண் தமது ஊருக்குத் திரும்புவதற்காக ரயில் நிலையம் செல்வதற்கு ஆட்டோவில் பயணம் செய்த பொழுது சூட்கேசை ஆட்டோவிலேயே தவிர விட்டுள்ளார் என்றும்,
பின்னர் உறவினர்கள் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து விவரங்களை உறுதிப்படுத்திய பின் தலைமைச் செயலக காலனி ராஜேஸ்வரி சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர் களிடம் சூட்கேசை ஒப்படைத்தார். மேலும் சூட்கேசை பத்திரமாக காவல் நிலைத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரான பத்மநாபனை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினார்.