கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவருடன் இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் இருந்ததால் அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் டென்னிஸ் விளையாட்டின் ரசிகை ஆவார். இந்நிலையில் இளவரசி கேட் மிடில்டன் சமீபத்தில் வாஷிங்டன் நகரில் நடைப்பெற்ற டென்னிஸ் போட்டியை காண சென்றுள்ளார். இதையெடுத்து அங்கு அவருடன் இருந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டில் அமலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் இளவரசி கேட் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கேன்சிங்டன் அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேட் மிடில்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அவர் கொரோனா தொற்று உள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் இங்கிலாந்து அரசின் நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.