பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நான்காவது சீசன் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5-யில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த நான்கு சீசன்களிலும் ஒரே மாதிரியான டாஸ்க்குகள் இடம் பெற்ற நிலையில் 5-வது சீசனில் புது விதமான டாஸ்க்குகள் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த சீசனில் தொலைக்காட்சி பிரபலங்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்ததால், இந்த சீசனில் சினிமா பிரபலங்களை களமிறக்க உள்ளனர். மேலும் இந்த சீசனுக்கான பட்ஜெட் மற்ற சீசன்களை விட அதிகம் என கூறப்படுகிறது. இதனால் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.