Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படியும் இருப்பாங்களா…? வாலிபரின் ஏமாற்று வேலை… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி உள்ளார். அதன்பிறகு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பார்த்திபன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கின்றார்.

இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |