Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… சிக்கிய 4 நபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

குட்கா பொருட்கள் பதுக்கி வைத்த 4  நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் மாநகர காவல் துறையினருக்கு ஒரு சில கடைகளில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் பரத்சிங் என்பவரக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்தியபோது குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பகத்சிங்கிடம்  நடத்திய விசாரணையில் மகுடஞ்சாவடி பகுதியிலுள்ள ஒரு குடோனில் 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கஞ்சா பதுக்கி வைத்த வழக்கில் ராஜஸ்தான் பகுதியில் வசிக்கும் பரத்சிங், ஓம்சிங், தீப்சிங் மற்றும் மகுடஞ்சாவடி பகுதியில் வசிக்கும் மதன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் ரொக்க பணம் 33 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போலீஸ் கமிஷனர் இந்த 4 குற்றவாளிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர்க்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்பின் இந்த 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி குட்கா கடத்திய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |