ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட 200 முட்டைகளில் 120 முட்டைகள் கெட்டுப் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மட்டுமல்லாமல் அங்கன்வாடிகளும் மூடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு மட்டும் முட்டைகள், அரிசி, பருப்பு போன்றவை வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகின்றது. அப்படி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆயக்குடி அங்கன்வாடி மையத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 20 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இதையடுத்து அங்கன்வாடியை சேர்ந்த ஊழியர்கள் குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று ஒரு குழந்தைக்கு 10 முட்டைகள் வீதம் 20 குழந்தைகளுக்கு 21 முட்டைகளை வழங்கியுள்ளன. அதில் 120 முட்டைகள் கெட்டுப்போன நிலையிலும், சில முட்டைகள் கோழி குஞ்சு வரும் நிலையிலும் இருந்ததால் அதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குழந்தைகளின் பெற்றோர்கள் அங்கன்வாடிக்கு சென்று அங்கு இருந்த ஊழியர்களிடம் இது பற்றி தெரிவித்தனர்.