Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பிரதமர் வீடு கட்டும் திட்டம்” நடைபெற்ற முறைகேடு…. 7 பேர் மீது வழக்குப்பதிவு….!!

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து அரசு அதிகாரிகள் 7 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மூலம் மானியத்துடன் கடன் உதவி கொடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் வாயிலாக வீடு கட்டுவதற்கு பெறப்படும் கடன் உதவியால் பயனாளிகளுக்கு 2 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சத்து 70 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கொட்டரை ஊராட்சியில் போலி பயனாளிகளின் பெயரில் கணக்குகளை தொடங்கி முறைகேடு நடந்ததாக புகார் வந்தது. இதனை ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சுமார் 4 லட்சத்திற்கும் மேல் முறைகேடு நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் 2019- 2020 ஆம் ஆண்டில் பணிபுரிந்த ஒன்றிய மேற்பார்வையாளர்களான ஜெயசங்கர், மதினா, இளநிலை பொறியாளரான ராஜபாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களான ஜூலி, சங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலரான ஆலயமணி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கொட்டரை ஊராட்சி செயலாளர் சகுந்தலா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் குற்ற சதி போன்ற ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் பலர் தற்போது வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த முறைகேடு குறித்து விரைவில் உரிய விசாரணை நடைபெற இருப்பதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |