Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

‘நடமாடும் தடுப்பூசி வாகனம்” பொதுமக்கள் பயன்பெறனும்…. கலெக்டரின் தகவல்….!!

தடுப்பூசி போடும் நடமாடும் வாகனம் ஒன்றை கலெக்டர் கொடி காட்டி துவங்கி வைத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருக்கக்கூடிய முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நடமாடும் வாகனத்தை மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி கொடி காட்டி தொடங்கி வைத்தார். இதனையடுத்து கலெக்டர் மா.ஆர்த்தி கூறும்போது, காஞ்சிபுரத்தில் போர்க்கால அடிப்படையில் அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் தடுப்பு பணிகளில் உள்ள முன்களப்பணியாளர்கள் மற்றும் இணைநோய் இருப்பவர்களுக்கும் தடுப்புசி செலுத்தப்பட்டு கொரோனா முற்றிலும் தடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே மாவட்டம் முழுவதிலும் தடுப்பூசி முகாம் ஒவ்வொரு வட்டாரத்திலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தும் வகையில் மாவட்டத்திலுள்ள நகர்ப்புற பகுதிகளில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான அங்காடிகள், வழிபாட்டு தலங்களில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நடமாடும் தடுப்பூசி வாகனம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஆகவே முதற்கட்டமாக இந்த மாவட்ட நகராட்சிக்கு உட்பட்ட  மார்க்கெட் பகுதியில்  உள்ள காய்கறி, பழ வியாபாரிகளும், பொதுமக்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்துமாறு கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்  பி.ஜெயசுதா, இணை இயக்குனர் ஜீவா, துணை இயக்குனர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள பங்கேற்றனர்.

Categories

Tech |