ராமநாதபுரத்தில் குளிர்பானங்களை ஏற்றி வந்த சரக்கு லாரி டயர் வெடித்து கவிழ்த்ததில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள சத்திரக்குடி பகுதிக்கு மதுரையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றி சரக்கு லாரி வந்துள்ளது. இதனை மதுரையை சேர்ந்த அய்யங்காளை என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சத்திரக்குடியை அடுத்துள்ள மாவிலங்கை பகுதியில் வைத்து எதிர்பாராதவிதமாக சரக்கு லாரியின் டயர் வெடித்து கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த அய்யங்காளை மற்றும் உடன் இருந்த 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்திரக்குடி போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.