பிரசவத்தில் தாய் சேய் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் அன்புச்செல்வன், என்பவருக்கும் ராஜாமணிக்கும் பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அன்புசெல்வனும் ராஜாமணியும் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ராஜாமணி நிறை மாத கர்ப்பிணியான நிலையில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் ராஜாமணிக்கு மருத்துவமனைக்கு செல்லாமலே வீட்டிலேயே நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து ராஜாமணி மயக்கமடைந்து சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த கை.களத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.