Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன முட்டைகள்… அதிர்ச்சியடைந்த விவசாயி… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நாகப்பாம்பு கோழி முட்டைகளை தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் திருமலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் 50க்கும் மேற்பட்ட  ஏராளமான நாட்டுக்கோழிகளை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். அந்த கோழிகள் அனைத்தையும் தினமும் ஒரு கூண்டிற்குள் அடைத்து விடுவார். இந்நிலையில் 40 கோழிகள் தினமும் முட்டை இட்டு வந்துள்ளது. ஆனால் அந்த கோழிகள் இட்ட முட்டைகள் கடந்த ஒரு மாதமாக காணாமல் போனது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த திருமலைசாமி கோழி கூண்டை தினமும் கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாகப்பாம்பு கோழி கூண்டுக்குள் உள்ள முட்டைகளை கொத்தி உறிஞ்சி குடித்துக் கொண்டிருப்பதை கண்டு திருமலைசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து திருமலைச்சாமி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

 

Categories

Tech |