இயக்குனர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் மைனா, கும்கி, கயல், சாட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான காடன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ‘டேய் தகப்பா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கௌசிக் இயக்குகிறார். இந்த படத்தில் ஆராத்யா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மதுரை முத்து, பப்பு, ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜோஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.