Categories
அரசியல் மாநில செய்திகள்

”இத வச்சுக்கோங்க”ஸ்டாலினுக்கு 3 பெயர்… கிண்டல் செய்த அமைச்சர்…!!

தமிழில் பெயர் வையுங்கள் என்று சொல்லும் முக.ஸ்டாலின் முதலில் தனது பெயரை தமிழில் வைக்க வேண்டுமென்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் அமைய உள்ள சிறிய படகுகளில் தளம் மற்றும் மீன் விற்பனை கூடத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தமிழைப் பற்றிப் பேசும் திமுக தலைவரின் பெயர் தமிழில் இல்லை என விமர்சித்தார். தமிழுக்கு பேராபத்து திமுக தலைவரின் குடும்பத்தார் தான் என்று அவர் குற்றம் சாட்டினார்.

வெளிநாட்டு பயணத்தில் தனக்கு பாராட்டு விழா வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி கூறியது அவரின் பெருந்தன்மையை காட்டுவதாக தெரிவித்த ஜெயக்குமார் ,  குழந்தைகள் எல்லாம் தமிழில் பெயர் வையுங்கள் என்று திமுக கூறியது நல்ல ஆலோசனைதான். பெயரை தமிழில் வையுங்கள் என்று ஆலோசனை கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் , ஸ்டாலின் முதலில்  தமிழ் பெயர் வைக்கணும். ஸ்டாலின் என்ற பெயர் தமிழ் பெயரா. அவருக்கு நான் 3 பெயர் சொல்கின்றேன் என்று கிண்டல் செய்து , செம்புலநீரார் , பிசிராந்தையார், சீத்தலைசாத்தனார்  என்ற 3 பெயரில் ஒரு பெயரை திமுக தலைவர் ஸ்டாலின் வைத்துக் கொள்ளட்டும் சென்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கலடித்துள்ளார்.

Categories

Tech |