Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! செலவுகள் கூடும்….! பொறுப்புகளை ஏற்க வேண்டாம்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.

இன்று ஆரோக்கியம் என்பது அனுகூலமாக இருக்கும். தனவரவு இருக்கும். சில நேரங்களில் கொஞ்சம் குழப்பங்கள் இருக்கும். பெண்களிடம் எதிர்பார்த்த லாபங்கள் இருக்கும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். சில முயற்சிகள் கொஞ்சம் காலதாமதமாக நடக்கும். அவசரப்பட்டு எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். இன்று சந்திராஷ்டமம் தினம் என்பதினால் எதையும் எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். குடும்பத்தாரிடம் அன்பாக பேசவேண்டும். பிரச்னைகளைப் பெரிதாக்க வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மனதிற்குள் குழப்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.  சிந்தனையை குறைத்துக் கொள்ள வேண்டும். இறை வழிபாட்டில் நம்பிக்கை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். உறவினர் வருகை இருக்கும்.

செலவுகள் கூடும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். முயற்சிகள் பலனை கொடுக்கும். தொழிலுக்காக அதிகப்படியான கடன்கள் வாங்க வேண்டாம். மேலதிகாரிகளின் உதவியும் ஆலோசனையும் கண்டிப்பாக கிடைக்கும். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். யாரை நம்பியும் எந்த ஒரு பொறுப்பையும் கொடுக்க வேண்டாம். காதல் கசக்கும். காதலில் உள்ள நிலைபாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். பொறுமையாக இருந்து என்ன செய்ய வேண்டுமோ அதனை யோசித்து செய்ய வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை

Categories

Tech |