மகரம் ராசி அன்பர்களே.! விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.
இன்று உங்களுடைய பொருட்களை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. உங்களுடைய முடிவுகளில் தெளிவு வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். தேவையில்லாமல் பேசி கோபங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களிடம் பேசும்போது வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சில நண்பர்களை நம்பி நீங்கள் பொறுப்புகளை ஒப்படைத்தாலும் அந்த வேலைவாய்ப்புகள் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். வெற்றி செய்திகள் கண்டிப்பாக இருக்கும். கூடுதலாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது.
கவனம் வேண்டும். உழைப்பை அதிகப்படுத்தினால் உயர்வினை பெறமுடியும். அதிகப்படியான சிந்தனை வேண்டாம். யாரைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய பணியை நீங்கள் கவனித்தால் நன்மை நடக்கும். கடன் வாங்கி ஒருவருக்கு உதவிகள் செய்ய வேண்டும். என்று அவசியம் இல்லை. காதல் கசக்கும். காதலின் நிலைபாடுகளை புரிந்து கொள்ள வேண்டும். காதலில் உற்சாகமான நிலைகளை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தெளிவாக சிந்திப்பீர்கள். தெளிவான சிந்தனைக்கு நல்ல பலன் இருக்கும். கல்வியில் உங்களால் உயர முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை