மீனம் ராசி அன்பர்களே.! மன நிம்மதி கிடைக்கும்.
இன்று எல்லா விதத்திலும் உங்களுக்கு நல்லது நடக்கும். நண்பர்களால் நம்பிக்கை கிடைக்கும். திட்டமிட்ட பணிகளில் முன்னேற்றம் இருக்கும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல்கள் மனதில் சந்தோஷத்தை கொடுக்கும். தொலைபேசி வழித் தகவல் மனதில் சந்தோஷத்தை கொடுக்கும். இனிமையான பேச்சை வெளிப்படுத்துவீர்கள். வசீகரமான தோற்றம் இருக்கும். புதிய காதலில் ஈடுபட கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. சாதுரியமான பேச்சாற்றலால் காரியத்தை சாதித்துக் கொள்ள முடியும். குடும்பத்தில் சுகம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இணக்கமான போக்கு காணப்படும். கஷ்டங்கள் தீர்ந்து சிக்கல்கள் தீர்ந்து பிரச்சினைகள் தீர்ந்து மனதில் ஒரு நிம்மதி இருக்கும். எதிர்பாராத அலைச்சல் இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீது நல்ல மதிப்பு இருக்கின்றது.
ஆனால் சில நேரங்களில் திட்டமிட்டு ஒரு காரியத்தில் இறங்கி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள பணம் கையில் வந்து சேரும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கஷ்டங்கள் ஏற்பட்டாலும் கண்டிப்பாக அந்த கஷ்டங்களும் சரியாகிவிடும். காதல் கண்டிப்பாக கைகூடிவிடும். காதலில் சிரமங்கள் இருந்தாலும் தீர்ந்துவிடும். திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு நல்ல வரன்கள் இருக்கின்றது. அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் மென்மேலும் உயர முடியும். எதையும் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் ஊதா