தேனி மாவட்டத்தில் மனைவியை பிரிந்த துக்கத்திலும், உடல்நலம் சரியில்லாத காரணத்தினாலும் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக முன் ஏற்பட்ட கணவன்-மனைவி சண்டையில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியராஜன் சர்க்கரை நோயிலும், வயிற்றுவலியிலும் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து மிகவும் மனமுடைந்த பாண்டியராஜன் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் பாண்டியராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.