Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் இனி வீடு தேடி வந்து… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக சுகாதாரத்துறையில் அடுத்தடுத்து புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை புதிதாக ஆட்சி அமைத்த அரசு மிகவும் சிறப்பாக கையாண்டதன் விளைவாக, தமிழகத்தில் தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதலமைச்சர் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதில் முதல்கட்டமாக 20 லட்சம் நீரிழிவு, ரத்த அழுத்தம் உடைய பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று மாத்திரைகள் கொடுக்கப்படும் என சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியுள்ளார்.

Categories

Tech |