நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் 7 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா இரண்டாவது அலை முற்றிலும் நிறைவு பெறாத நிலையில் மக்கள் அதிகம் கூடுவதால் அதனால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை எச்சரித்த நிலையில் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது மகாராஷ்டிராவிலும் பாதிப்பு அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.