தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் இன்று 240 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.