Categories
பல்சுவை

தினமும் 7 ரூபாய் சேமிப்பு போதும்… மாதம் ரூ. 5,000 பென்ஷன் கிடைக்கும்… செம பிளான்…!!!

தினமும் ஏழு ரூபாய் சேமித்தால் போதும், நாம் 5000 வரை பென்ஷன் வாங்கும் திட்டத்தை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

அனைவருமே நமது முதுமை காலத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து திட்டமிடுவது மிகவும் அவசியமானது. முதுமை காலத்தில் எந்த கஷ்டமும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கு நமக்கு பென்ஷன் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பென்ஷன் திட்டங்களை பொருத்த வரை அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஒன்றிய அரசால் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அடல் பென்ஷன் யோஜனாவில் மாதம் 1000 முதல் 5000 வரை நமக்கு பென்ஷன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் முதலீட்டில் 50 சதவீதம் அல்லது ஆண்டுகளுக்கு ஆயிரம் ரூபாயை அரசு வழங்கும். அரசின் பங்களிப்பை பெற வேண்டுமெனில் நீங்கள் வருமான வரி செலுத்தாதவறாக இருப்பது முக்கியம். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதில் முதலீடு செய்வதற்குத் தகுதியானவர்கள். மாதம் 42 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் மாதம் 1000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். 84 ரூபாய் முதலீடு செய்தால் 2000 பென்ஷன் கிடைக்கும்.

126 ரூபாய் முதலீடு செய்தால் 3000 பென்ஷன் கிடைக்கும். 168 ரூபாய் முதலீடு செய்தால் 4000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். 210 ரூபாய் முதலீடு செய்தால் 5000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் 5000 அல்லது ஆண்டிற்கு 60 ஆயிரம் வரை நம்மால் பென்ஷன் வாங்க முடியும். அதாவது நீங்கள் 210 ரூபாய் மாதத்திற்கு முதலீடு செய்து வந்தீர்கள் என்றால், ரூபாய் 5000 மாதாந்திர பென்ஷன் கிடைக்கும்.

Categories

Tech |