Categories
பல்சுவை

இனி இந்த ஒரு ஆப் மட்டும் போதும்…. அத்தனை ஆப்பையும் ஆப்ரேட் பண்ணலாம்…..!!!!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பீப்பர் செயலி டெக் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது.  டிவிட்டர், பேஸ்புக் மெசெஞ்சர், ஆப்பிள் மெசஞ்சர், கூகுள் ஹேங்அவுட்ஸ் உள்ளிட்ட பல்வேறு மெசேஜ் செயலிகள் யூசர்கள் பயன்படுத்தி வருவதால், அவற்றின் நோட்டிபிகேஷன் மற்றும் மெசேஜ்களை படிப்பதில் சோர்வடைகின்றனர். மேலும், ஒவ்வொரு செயலியை பார்ப்பதற்கும் ஸ்மார்ட்போனில் ஒவ்வொரு பக்கத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால், பல செயலிகளை பல நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்ட பெபல் ஸ்மார்ட்வாட்ச் நிறுவனம், Beeper App என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது. டிவிட்டர், பேஸ்புக், மெசஞ்சர், டெலிகிராம், சிக்னல், ஸ்கைப், கூகுள் ஹேங்கவுட்ஸ், ஐ.ஆர்.சி, எஸ்.எம்.எஸ் 15 மெசேஜ் செயலிகள் இந்த ஒரே செயலியில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பீப்பர் செயலியின் நிறுவனர் எரிக் மிகிகோவ்ஸ்கி, மெசேஜ் செயலிகளின் HUB -ஆக பீப்பர் செயலி இருக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், இந்த செயலி மற்ற செயலிகளைப்போல் இலவசம் கிடையாது. ஒவ்வொரு மாதம் 10 டாலரை யூசர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Categories

Tech |